யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது.
வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ் வழங்கும் திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக இணைத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வேண்டுகோள் படிவத்தை இணையத்தினூடாக சமர்ப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொர்பான அனைத்து விபரங்களையும் திறந்த மற்றும் தொலைக்கல்வி இணையத்தள முகவரியான codl.jfn.ac.lk இல் சென்று பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 021-2223612 எனும் தொலைபேசி எண்ணின் ஊடாக தொடர்பை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Leave a comment