முல்லைத்தீவு, செம்மலைக் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளனர். அளம்பில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலைக் கடலில் இன்று நீராடச் சென்றுள்ளது. இதன்போது,...
கொழும்பிலுள்ள நகர்ப்பகுதியான பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தில் மாத்திரம் 5 பொலிஸ் வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து உடைத்துத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகையின் முன்பாகவும், காலிமுகத்திடலில் ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டும் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து...
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்...
திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவ சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு திருகோணமலை கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர்...
திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகம் முன்னால் இன்று ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்தே மக்கள்...
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தைகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு...
திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்...
யாழ்ப்பாணத்திலும் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நேற்று முதல் அரச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள் வீடுகள் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டும், தீ...
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அத்தியாவசிய பொருள்களை எடுத்து வருவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் யாழ்ப்பாணம் வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்கள் பொருள்களை வழங்கவேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர்...
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது...
விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏஆர்வி மற்றும் ஏஆர்எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏஆர்வி மருந்துகள் வடக்கு மாகாண மருத்துவமனைகளில் குறிப்பிட்டளவு உள்ள போதும் ஏஆர்எஸ் தடுப்பூசி...
கொழும்பு, ஆமர்வீதி பகுதிக்கு சமையல் எரிவாயு ஏற்றிவந்த லொறிலிருந்து சுமார் 100 ‘கேஸ் சிலிண்டர்’கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன. தமக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆமர்வீதி...
இலவச சுகாதார சேவை கடுமையாக வலுவிழந்து விட்டது .இதனால் நிச்சயம் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சிறுவர்களின் கல்வி சீரழிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இதற்குரிய தீர்வாக எதனையும் வழங்க இன்னமும் நாடாளுமன்றம் தயாரானதாக தெரியவில்லை என அரச...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. “அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்துக்கு தலைவணங்கு”...
மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு கள்ளுத்...
யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பொலிஸ் பிரிவுகளுக்கு இ டமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு இடமாற்றம்...
நாளை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும்...
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அரச உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழதுள்ளார் என்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில்...
பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அவர்களைத்...
அக்கரைப்பற்று, இறக்காமம் – வாங்காமம் பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில்...