“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நேரடிப் பேச்சை நான் வரவேற்கின்றேன்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்...
“வவுனியாவில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும் பேரணிக்கு அனைரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும்...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டவாறு நடைபெறும். ரெலோவின் நிலைப்பாடு தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...
இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று மாலை தெரிவித்தனர். வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் ஒன்பது பகுதிகளில் இந்த விபத்துகள்...
கூடிய விரைவில் மாகாண சபைத் நடக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது ”மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்குமா?’ – என்ற கேள்விக்குப்...
மண்ணெண்ணெய் வாங்கித் தருவதாகக் கூறி வயோதிபப் பெண்ணிடம் ஆயிரம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார். யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, குறித்த...
பதுளை நகரத்தை அண்மித்த மெதிரிய நீர்நிலையில் நீராடச் சென்ற மாணவர்களுள் ஒருவர் நீரிழ் மூழ்கிப் பலியாகியுள்ளார். பதுளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் நிலக்ஷன் (வயது 16 ) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச அடுத்த வாரம் இந்தியா பயணிக்கவுள்ளார் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன என்று நிதி அமைச்சின்...
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்குண்டு இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். இருவரும் 13 வயதுடையவர்கள் என்று சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். றியாஸ் முஹம்மட் ஆசீக், முஹம்மட் இப்றாஹிம் ஆகிய சிறுவர்களே பரிதாபகரமாக மரணித்தனர்....
“எந்தத் தேர்தல் வந்தாலும் ராஜபக்சக்களின் குடும்பக் கட்சியுடன் நாம் இணையவேமாட்டோம். அவ்வளவுக்கு நாம் முட்டாள்களும் அல்லர்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகப் பதிலடி வழங்கினர். ‘முன்னாள் அமைச்சர்களான...
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, நாளை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திலும், பிற்பகல் 2 மணியளவில் மன்னாரிலும் மாவட்ட செயலகங்களில் வைத்து மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கிவைக்கவுள்ளார். வடக்கு மீனவர்கள எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையைக்...
“முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தேர்தலொன்று வருமாயின் எங்களிடம் அவர்கள் வரவேண்டி வரும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக்...
பலாங்கொடை, நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர். இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்....
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தையடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசர தீர்மானமொன்றை எடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இவ்வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதனால் உள்ளூராட்சி...
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தற்காலிகமாகக் கைவிடுமாறு அரசுக்கு, இலங்கை மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. சுமார் ஓராண்டு வரை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது. அரசால் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு...
மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரச எதிர்ப்பு ‘அலை’யை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாபெரும் போராட்டமொன்றை நடத்துவதற்கு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர். ‘தாய் நாட்டை மீட்போம்’ என்ற தொனிப்பொருளின்...
தேசிய அரசு அமைவது குறித்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளை திட்டவட்டமாக நிராகரித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது....
கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு இன்று நடைபெற்றது. இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை கடற்றொழில் அமைச்சர்...
இலங்கையில் இருந்து சென்றது எனக் கருதப்படும் மர்மப் படகு ஒன்று இயங்கு நிலையில் தமிழகப் பொலிஸாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் படகு இயந்திரம் பொருத்தப்பட்டு எரிபொருள் நிரப்பிய நிலையில் ஆட்கள் எவரும் இன்றி நிறுத்தியிருந்தபோதே...