ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு வழங்கியுள்ளது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கத்தோலிக்க சபையும்...
நாட்டில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்கள் காரணமாக 13 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரி – எல்பிட்டிய வீதியில் நேற்று பிற்பகல் மோட்டார்...
ஜனாதிபதியையும் தற்போதைய அரசையும் பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று நுவரெலியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துடன் பொதுமக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. ‘எங்கள் புத்தாண்டு நடு...
“2015 ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, கௌரவமான முறையில் மஹிந்த ராஜபக்ச வெளியேறினார். அதனால்தான் மக்கள் அவரை மறுபடியும் ஆதரித்தார்கள். எனவே, மக்கள் விரட்டும்வரை காத்திருக்காமல், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும்.” –...
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு...
அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...
இலங்கையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் நாளை அதிகாலை 5.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல பகுதிகளிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம்...
கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினமான இன்றும் இளைஞர்களும் யுவதிகளும் போராட்டக் களத்திலேயே தங்கியிருக்கின்றனர். ஜனாதிபதி...
கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் சிங்களச் சகோதரர்களுடன் தமிழ்ச் சகோதரர்களும் கைகோர்த்து போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
“இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-...
“மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
“கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளையோர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் போராட்டம் உன்னதமானது. இந்தப் போராட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டியக்க...
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து...
கூரிய ஆயுதத்தால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை, 13 ஆவது ஒழுங்கைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த குறித்த நபர், ஹொரணை ஆதார...
ஒரே நோக்கத்துக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அணிதிரண்டுள்ளனர். தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி மற்றும்...
தென் கடற்பரப்பில் பெருமளவு போதைப்பொருட்களுடன் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் 300...
“தேசிய அரசு ஒன்று வந்தால் அதில் நாங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் இல்லை. அவ்வாறான ஒரு தேவை ஏதும் இப்போது இருக்கின்றது எனவும் நாங்கள் கருதவில்லை.” – இவ்வாறு...
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் நேற்றுக் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் முற்பகல் 11 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை...
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில்...
நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நிராகரித்துள்ளார்...