தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு...
“பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்து நீடிப்பார். பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்படவுள்ளேன் என்று வெளியான தகவல் வதந்தியாகும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்....
“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து கி.பி. 33ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால்...
“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவிக் காலம் முடிவடையும் வரை நான் பதவியில் இருப்பேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே...
வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டுத் தகடுகள் களவாடப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள்...
தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு அலுவலகம் சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்., இராமநாதன் வீதியிலேயே இந்த அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் யாழ். மாநகர...
அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்., இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன. இந்தக்...
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளது எனப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்...
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15...
ஜெனரேட்டர் வெடித்து தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்வெட்டுக் காரணமாகப் பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையால் 38 வயதான தாயும், அவரின் 9 வயதான மகளும், 4 வயதான...
நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதன் முதற்கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...
“இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருப்பதன் காரணத்தால் மத்திய அரசின் மூலமான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாநகர சபை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மட்டு. மாநகர சபையின் அபிவிருத்தியில் ஜேர்மன் பங்காளியாக இணைந்துகொள்ள வேண்டும்.” – இவ்வாறு மட்டக்களப்பு...
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையால் நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால், ஒருவார காலம் நாட்டை...
பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை...
கடவத்தையிலுள்ள ஆடையகம் ஒன்றில் பணப் பெட்டகத்தை உடைத்து 2 கோடி 70 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப்...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராகக் கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கைப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு நாளை பேச்சு நடத்தவுள்ளது. குறித்த பிரேரணைகளை,...
எதிர்காலச் சந்ததியினருக்கான தாய்நாட்டைப் பாதுகாக்கும் வகையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் இலங்கைவாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளுமாறு சிங்களக் கலைஞர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தங்களால் தமிழ்மொழியை சரளமாகப் பேச முடியாமைக்கு வெட்கப்படுவதாகக் கவலை...
“மக்களின் அமைதியான போராட்டத்தைச் சீர்குலைக்கும் அரசின் முயற்சி நாட்டுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.” – இவ்வாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில்...