ஜோதிடம்

இன்றைய ராசிபலன் : 15 அக்டோபர் 2024 – Daily Horoscope

Share
tamilnaadi 1 scaled
Share

இன்றைய ராசிபலன் : 15 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 15.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 29, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கும்பம், மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம், ஆயில்யம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். இன்று பணிச்சுமை காரணமாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்காது. வாழ்க்கை துணை மீது அதிருப்தி ஏற்படும். உங்கள் வேலையில் சிந்தனையுடன் செயல்படவும். வேலையிலும், வியாபாரத்திலும் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது கவனம் தேவை.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சிக்கிய பணத்தை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று புதிய விஷயத்திற்காக கொஞ்சம் பணம் செலவிடுவீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவியால் நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகளிடம் இருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும். உங்களின் வேலைப்பளு காரணமாக கடின உழைப்பும், அதிக நேரமும் செலவிட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையிடமிருந்து மன அழுத்தம் சந்திக்க நேரிடும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் முயற்சி நற்பலனை தரும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று எந்த விஷயத்திலும் கடின உழைப்புக்கு பிறகு தான் வெற்றி கிடைக்கும். இன்று எந்த வேலையையும் தள்ளிப் போட வேண்டாம். அலுவலகத்தில் உங்களின் வார்த்தையில் இனிமையை கடைப்பிடிக்கவும். இன்று சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் முதலீடு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை.நண்பர்களுடன் சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நிதானமாக செயல்படுவது நன்மை தரும். இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவோம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் தேவைக்காக அதிக பணம் செலவிட நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட்டு விட்டு மகிழ்வீர்கள். இன்று நண்பர்களின் உதவியாள் தடைப்பட்ட வேலைகள் முடியும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த முதலீடு சார்ந்த விஷயங்களிலும் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. திட்டமிட்ட வேலைகள் நிறைவடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் தொடர்பான விவாதம் செய்வீர்கள். இன்று கண் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று திடீரென பெரிய அளவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் செல்வம் பெருகும். உங்களின் நிதி நிலை வலுவடையும். மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களின் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்வது நல்லது. திருமணம் வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஏமாற்றமளிக்கக் கூடிய சில விஷயங்கள் கேட்பீர்கள். இதனால் மன உளைச்சல் ஏற்படும். பிற்பகலுக்குப் பிறகு வணிக தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெண் நண்பர்களின் உதவியால் உங்கள் வேலை விரைவாக முடியும். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் முன்னெடுக்கும் வேலையில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு மனதிற்கு பிடித்த விஷயங்கள் மட்டுமே செய்வது நல்லது. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பீர்கள். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் எதிரிகளை தோற்கடிப்பீர்கள்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் அதில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பான வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் மன அழுத்தம் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...