tamilnaadi 51 scaled
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06.03.2024 – Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 06.03.2024 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மார்ச் 06, 2024, சோபகிருது வருடம் மாசி 23, புதன் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் உள்ள ரோகிணி, மிருகசீரிடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும். உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்துவோம். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். நீங்கள் செய்யக்கூடிய தவறுகள், தாமதங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும். சகோதர, சகோதரிகளின் உதவி எளிதில் கிடைக்கும். இன்று உங்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம தினமாக அமைகிறது. இன்று எந்த ஒரு ஆபத்தான வேலைகளிலும் ஈடுபட வேண்டாம். வீட்டை புதுப்பித்தல், சில தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நிலவை வந்த சற்று உங்களை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செயல், வார்த்தைகளில் நிதானமும், இனிமையும் பராமரிக்கவும். உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்யவும்.
​பாம்பு நிழல் கிரகம் ராகுவுடன் இணையும் ஒளி கிரகம் சூரியன்: 4 ராசிகள் மிக எச்சரிக்கை தேவை

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கௌரவம் சமூகத்தில் உயரும். உங்களின் வசதிகளை மேம்படுத்திக் கொள்ள சில பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிரிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வேலை, தொழில் தொடங்குவதற்கு சிறப்பான நாளாக இருக்கும். தடைப்பட்ட நிலுவையில் உள்ள வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணம் தொடர்பான விஷயங்களில் இன்று சாதக பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பம், பண நற்பெயர் உயரும். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு, உங்களுக்கான துணை தேடி வரும். என்று மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருக்கும். கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய நாள்.

5சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் இருப்பீர்கள். இன்று கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும். மற்றவர்களிடம் நிதானமாக பேசுவதும், பழகுவதும் நல்லது. எந்த ஒரு முதலீடு விஷயத்திலும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு சற்று பலவீனமான நாளாக இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. முதலீடு செய்ய நினைப்பவர்கள் நல்ல லாபத்தை பெறலாம். சமூகப் பணிகள், பொறுப்புகளை நிறைவேற்ற ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்களின் தடைப்பட்ட வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பழைய நம்பரை சந்தித்து மன மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள். இன்று நீங்கள் குடும்ப பொறுப்புக்கள் குறித்து கவலைப்படுவீர்கள். என்று உங்கள் இயல்பில் கோபமும், எரிச்சல் தன்மை இருக்கும். இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும். இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மற்றவர்களிடம் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் சங்கடத்தை தருவதாக இருக்கும். அதனால் பேச்சில் இனிமையும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தும் நடந்து கொள்ளவும்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பான நபர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட காரியங்கள், லட்சியங்கள் நிறைவேறும். உங்களின் மதிப்பு மரியாதை மேம்படும். கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். அதற்காக பணத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். உங்கள் துணையுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாக மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் நிதானம் தேவை. தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைத்த மகிழ்ச்சி பெருகும். இன்று பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். உங்கள் துணைக்காக பரிசு பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்கள் வேலை தொடர்பாக கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் ஆவணங்களைச் சரி பார்ப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்கள் பேச்சால் பிறரின் மனதை வெல்வீர்கள். உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடைவதற்கான சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பப் பிறப்புகளை சிறப்பாக கையாண்டு நற்பெயர் பெறுவீர்கள். என்று உங்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது. உங்களின் குடும்பம் மற்றும் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படும்.

Share
தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...