sani bhagavan3
ஜோதிடம்

துன்பம் நீக்கும் புரட்டாதிச் சனி

Share

துன்பம் நீக்கும் புரட்டாதிச் சனி

ஆடி வெள்ளிக்கும், ஆவணி ஞாயிருக்கும் எந்த அளவுக்கு சிறப்புகள் உண்டோ! அதை விட அதிக சிறப்புகள் கொண்டது புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமை.

புரட்டாதி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார். எனவே சனிக்கிழமை விரதம் இருந்து மகா விஷ்ணுவை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புக்கள் நம்மை வந்தடையாது என்பது கலாதிகாலம் காணப்படும் ஐதீகம்.

இந் நாளில் விரதம் இருந்து பச்சரிசி மா, வெல்லம் மற்றும் ஏலக்காய் ஆகியவை கலந்து மாவிளக்கு ஏற்றி பூஜை செய்து சனி பெருமாளை வழிபடவேண்டும். மாவிளக்கு ஏற்றுவதோடு, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது.

சிலர் பலவகை உணவுகளை படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், மிளகு சாதம், தேங்காய் சாதம், தயிர்சாதம், எள்ளு சாதம், கொண்டைக்கடலை சுண்டல், உளுந்து வடை, மிளகு வடை செய்து படைத்து வழிபடுவர்.

இவாறு புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வந்தால் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.

வசதி இருப்பவர்கள் புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்து அன்னதானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் கைகூடி வரும். நினைத்தவை நடக்கும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 11 நவம்பர் மாதம் 2025 : 12 ராசிகளுக்கான பலன்கள்

இன்று நவம்பர் 11ம் தேதி, ஐப்பசி மாதம் 25 சந்திர பகவான் கடக ராசியில் சஞ்சாரம்...