DETUUU
ஜோதிடம்

கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள்

Share

கடன் தொல்லையை தீர்க்க இலகு பரிகாரங்கள்

கடன் வாங்காத யாருமே இன்றைய காலகட்டத்தில் இருக்க முடியாது. கடன் வாங்குவது சகஜமாகிவிட்டது.
ஆனால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியமாகும்.

முன்னோர்கள் பசியோடு உறங்கு கடனோடு உறங்காதே என சொல்லியுள்ளனர்.

எனினும் ஏதோ ஒரு காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விடும். இது காலப்போக்கில் பெரிதாக தீராத பிரச்சினையாகிவிடும்.

இவ்வாறான கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு கடன் வாங்குவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சில பரிகாரங்களை செய்தால் மனதுக்கு நன்று.

  • எமது முந்தைய வினைகளின் காரணமாக உண்டான கடன்களிலிருந்து மீள குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும்.
  • கோமாதா வழிபாடு உங்களை நிச்சயம் காக்கும். கோமாதா செல்வத்தின் அம்சமாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் கண்விழித்ததும் பசு மாட்டை காண்பது சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
    பசுவின் பின்புறத்தில் தொட்டு வணங்குவது செல்வம் சேர வழிவகுக்கும்.
  • வீட்டைஎன்றும் சுத்தமாகவும் தெய்வ கடாட்சமாகவும் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். திருமகள் தங்கும் உங்கள் சுற்றமும் செயலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • பைரவரை வழிபட்டு வந்தால் கட்டாயம் உங்களின் எல்லா கடன்களும் தீரும். அதுபோல பிரதோஷ வழிபாடு நிச்சயம் எத்தனை பெரிய கடன்களையும் படிப்படியாக தீர்க்க உதவும்.
  • பஞ்சமி தினத்தில் அம்பிகையை விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும்.
  • முடிந்தவரை விளக்கு வைத்தபிறகு கடன் கொடுக்காதீர்கள் . அத்துடன் கடனையும் வாங்காதீர்கள்.
  • நம்பிக்கை தான் வாழ்க்கை. கடவுளின் அருளோடு உங்கள் வாழ்க்கையையும் சீரமைத்துக் கொண்டு வீண் செலவுகளைக் குறைத்து வாழுங்கள்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...