deepavali
ஜோதிடம்பொழுதுபோக்கு

அமாவாசையோடு வரும் தீபாவளி: இதை செய்யவே கூடாது!-

Share

தீபாவளியோடு அமாவாசை சேர்ந்து வருவதினால், தீபாவளி தினத்தில் முன்னோர்களுடைய வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி அறிவோம்.

தீபாவளி அன்று அதிகாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். பாவங்களுக்கு விமோசனம் தரும் கங்காதேவி, தீபாவளி தினத்தன்று நம் எல்லோரது வீட்டிலும் இருக்கக்கூடிய வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம்.

நாளைய தினம் தீபாவளி தினத்தன்று எல்லோரும் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் வைத்து நீராடி கொள்ளவேண்டும்.

ஆனால் அமாவாசை தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் இருக்கலாம்.

தீபாவளி தினத்தோடு சேர்ந்து வரும் அமாவாசை என்பதால் இந்த நாளில் எந்த தோஷமும் கிடையாது. அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். முடிந்தவரை நாளை காலை 5.30இற்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்த பின்பு பூஜை அறையை அலங்கரித்து வைத்து, பூஜை அறையில் குறைந்தது ஐந்து தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்.

அதிகபட்சம் உங்களுடைய விருப்பம் எத்தனை தீபங்கள் வேண்டுமென்றாலும் ஒற்றைப்படையில் ஏற்றிக் கொள்ளலாம்.

கேதார கௌரி விரதம்

சிலர் விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும், சிலர் நோன்பு இருக்கக்கூடிய வழக்கம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். நோன்பு என்பது அவரவர் வீட்டு வழக்கப்படி பாரம்பரியமாகப் பின்பற்றி வரக்கூடிய ஒரு விடயம்.

இந்த தீபாவளி தினத்தன்று, அதாவது ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்த கௌரி விரதம் சிவ பெருமானை நினைத்து இருக்கக்கூடிய விதமாக சொல்லப்பட்டுள்ளது.

சக்தி தேவியை தான் இந்த இடத்தில் கௌரி என்ற நாமத்தை கொண்டு நாம் அழைக்கின்றோம்.

சிவபெருமானுடன் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவம் இருந்து விரதம் மேற்கொண்டு, ‘சிவனில் பாதி பார்வதி தேவி’ என்ற வரப்பினை பெற்ற நாள் தான் இந்த ஐப்பசி மாத அமாவாசை நாள்.

எனவே கணவனும் மனைவியும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கேதார கௌரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

பிரிந்திருக்கும் கணவன் மனைவி இந்த விரதத்தை மேற்கொண்டால் அவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 15 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 15.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசிமாதம் 1, வியாழக் கிழமை, சந்திரன் விருச்சிகம் ராசியில்...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 மே 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilnaadi 2
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 13..05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 30, செவ்வாய்க் கிழமை, சந்திரன் விருச்சிகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 12 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.05.2025 விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 29, திங்கட் கிழமை, சந்திரன் துலாம்...