இன்றைய ராசி பலன் 18.07.2023 – Today Rasi Palan
இன்று செவ்வாய் கிழமை, ஜூலை 18, சந்திரனின் பயணம் நாள் முழுவதும் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் நடக்கிறது. மேலும் கடக ராசியில் சூரியன், புதன் மற்றும் சந்திரன் என 3 கிரகங்களின் சஞ்சாரம் மிகவும் மங்களகரமானதாகவும். யோகத்தையும் தரும்.
குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருப்பதால் கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட கிரக நிலையில் கடகம், கன்னி உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான நாளாக அமையும்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான பலன் தரும் நாளாக இருக்கும். உங்கள் இயல்பில் கோபமும், இரக்கமும் கலந்த நாளாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் மன அமைதியின்மை இருக்கும். இன்று கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
எதிர்பார்த்த பண ஆதாயம் இல்லாமல் கோபம் ஏற்படும். உங்களில் தொண்டு மனப்பான்மை மேலோங்கும். குடும்பத்தினரின் பிடிவாதமான நடத்தை உங்களை தொந்தரவு செய்யலாம். அரசுத் துறை தொடர்பான பணிகள் ஆச்சரியமான பலன்களைத் தரும்.
ரிஷபம் ராசிபலன்
இன்று ரிஷப ராசியினருக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ஆரோக்கியம் சிறக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. பணியிடத்தில் தேவையற்ற சண்டை, மனஸ்தாபம் ஏற்படும். ஒருவரின் தலையீடு உங்களை பாதிப்பதாக இருக்கும்.
இன்று மற்றவர்களின் ஒத்துழைப்பின் தேவை அதிகமாக இருக்கும், எனவே வீண் பேச்சுகளை தவிர்க்கவும். பண ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்தபடி லாபம் கிடைப்பதில் சுணக்கம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மன அழுத்தம் இருக்கும். மூச்சுத் திணறல் பிரச்னைகளை உடனடியாக கவனிக்கவும்.
இன்று, சூழ்நிலைகள் மிதுன ராசிக்காரர்களை எல்லா விஷயங்களிலும் வெற்றி பெற வைக்கும். ஆனால் ஒவ்வொரு நொடியும் உங்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தால், நீங்கள் குழப்பத்தில் இருப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுங்கள்.
நாளின் தொடக்கத்தில் வேலை, தொழிலில் சிக்கல்கள் காரணமாக பதற்றம் ஏற்படலாம். நாளின் நடுப்பகுதியில் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும், சில அனுபவமிக்க நபர்கள் உங்களுக்கு வேலையில் உதவுவார்.
கடகம்
இன்று உங்கள் ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இது உங்களுக்கு வெற்றியைத் தரும். அதே போல் இன்று உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். எந்த வேலையையும் நீங்கள் புத்திசாலித்தனமாக செய்து முடிப்பீர்கள்.
வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். புதிய வணிக ஒப்பந்தம் மனதை உற்சாகப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று வேலையில் தீவிரமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். சில முக்கிய வேலைகளில் திருப்தி அடைவார்கள். தேவைப்படும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்
இன்று சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் கௌரவத்தையும், செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். உங்கள் செயல்பாடு, குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் வருத்தப்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும். இது குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும்.
தொழில் மற்றும் வணிகத்தில் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டிய நாள். யாரை உங்கள் எதிரியாகக் கருதுகிறீர்களோ, அவர் உங்களுக்கு ஒரு வகையில் உதவுவார்கள். ஆடம்பரத்தை குறைக்க வேண்டிய நாள்.
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு இன்று பல்வேறு வகையான சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் உங்கள் மரியாதை பாதிக்கப்படலாம். இன்று நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைத்ததற்கு நேரெதிராக நடக்க வாய்ப்புள்ளது.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் ஏற்படலாம். வேலை வியாபாரத்தின் முன்னேற்றம் தடைப்படும். நிலம்-சொத்து அல்லது மற்ற ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் தொடர்புடையவர்கள் இன்று முயற்சி செய்தால் சாதகமான பலன் கிடைக்கும்.
துலாம்
இன்று துலாம் ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். இன்று தடைப்பட்டுப்போன வேலைகள் செய்து முடிப்பீர்கள். பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் மனதின் ஒருவித சலனம் இருந்து கொண்டே இருக்கும். வேலை வியாபாரம் போன்றவற்றில் நிச்சயம் பணம் வருவாய் மேம்படும்.
தந்தை மற்றும் பூர்வீக சொத்து விஷயத்தில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்கு விஷயங்களில் பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சக ஊழியர்களுடன் ஏதோ ஒரு விஷயத்தில் மன குழப்பத்துடன் இருப்பார்கள். வேலை தொடர்பாக யாரிடமும் தேவையற்ற அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும். இன்று பழைய விவகாரம் அல்லது சச்சரவுகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.
வேலை வியாபாரத்தில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள். தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் மற்றும் வெகுமதிகளைப் பெறுவீர்கள். பயணங்கள் ஏற்படலாம். வியாபாரத்தைப் பொறுத்தவரை நன்மைகள் பெற்று மன திருப்தி அடைவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் சோம்பல் காரணமாக, வேலை செய்து முடிக்க தாமதமாகலாம். ஆன்மீகத்தின் மேல் ஆர்வம் மற்றும் அதிர்ஷ்டம் மேலோங்கும். இன்று சுகபோகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மதியம் வரை அலட்சியம் வாடிக்கையாக இருக்கும்.
முன்னோர்களின் சொத்து பெறுவது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் திறமைக்கு ஏற்ப பணம் நல்ல பதவியும், சம்பாத்தியமும் கிடைக்கும். குடும்பத் தேவைகளுக்காக அதிக பணம் செலவழிப்பீர்கள்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பல விஷயங்களில் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் பேச்சு, செயலில் நிதானமாக செயல்படவும். மனம் குழப்பமடையும். நாளின் தொடக்கத்திலிருந்து மதியம் வரையிலான நேரம் மிகவும் குழப்பமாக இருக்கும்.
கவனமாக யோசித்த பிறகு எந்த ஒரு ஒப்பந்தத்தையும் பெறுங்கள். பண ஆதாயம் பெற தீவிரமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். லாபத்தைப் பெறும் நோக்கில் செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன உளைச்சல் காரணமாக உள்ளுக்குள் வெறுப்பு ஏற்படும்.
கும்ப ராசி
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு மரியாதை அளிக்கும். உங்கள் மென்மையான குணம் மற்றவர்களை ஈர்க்கும். பணியிடத்தில் போட்டியாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். பழைய ஒப்பந்தங்கள், முதலீடுகளால் பண பலன்கள் கிடைக்கும்.
எதிர்காலத்திற்காக புதிய திட்டம் தீட்டுவீர்கள். இன்று பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பெற்றோருடன் உறவு மேம்படும். ஆணவம் அல்லது பிடிவாதத்தால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களை விட இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் எந்த வேலையைச் செய்யத் தொடங்கினாலும், சூழ்நிலைகள் தானாகவே அதற்குச் சாதகமாக மாறும். ஆனால் உங்களின் சோம்பேறித்தனத்தைக் கட்டுப்படுத்தி வேகமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டியாளர்களை சிறப்பாக சமாளிப்பீர்கள். சகோதரர் மற்றும் சகோதரர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- 2023 rasi palan
- daily palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2021
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi vendhar tv weekly rasi palan
- shelvi weekly rasi palan
- sun tv rasi palan
- today rasi palan in tamil
- tomorrow rasi palan
- vendhar daily rasi palan
- vendhar tv rasi palan
- vendhar tv weekly rasi palan
- weekly rasi palan
- weekly rasi palan vendhar tv
Leave a comment