ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christmas

Share
tamilnaadi 5 scaled
Share

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christma

இன்றைய ராசிபலன் 25.12.2024, குரோதி வருடம் மார்கழி 10, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு வாழ்க்கை துணையின் ஆலோசனை சிறப்பான பலனை தரும். இன்று லாபம் அதிகரிக்கும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வணிகத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்க முடியும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஞாபகத்தில் சிறப்பான வெற்றியை கண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாகும். பெற்றோரின் ஆலோசனை சொந்த தொழில் சாதகமான பலனை தரும். அரசு தொடர்பான காரியங்கள் விரைவாக நிறைவேறும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். இன்றுந் உங்களின் இலக்கை அடைவதில் கவனமாக செயல்படவும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய நாள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான வெற்றியை பெற்று மகிழ்வீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சொத்து வாங்கும் முயற்சியில் சிறப்பான வெற்றி கிடைக்கும். உங்கள் வேலை தொடர்பான முயற்சியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வேலை தொடர்பான பயணங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அன்பானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிக்கவும். அதன் மூலம் மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு போட்டி தேர்தல் சிறப்பான வெற்றி கிடைக்கும். புதிய எதிரிகள் தோன்ற வாய்ப்புள்ளது. சகோதரர்களின் உதவியால் உங்களின் வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க முடியும். உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில் தொடர்பாக சிறப்பான லாபம் பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று சோம்பலை விடுத்து கடின உழைப்பின் மூலம் சிறப்பான லாபத்தை பெறலாம். இன்று குடும்பத்தில் சகோதர, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தந்தையின் உதவியால் குடும்பத்தில் இணக்கமான சூழல் ஏற்படும். காதல் வாழ்க்கையில் புதிய ஆற்றல் நிறைந்திருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களை சுற்றி உள்ள சூழல் இனிமையாக இருக்கும். மனம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. உங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்ற போதுமான பணம் கிடைத்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்று உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் தேடி வரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். இன்று முழு மனதுடன் இருக்கக்கூடிய ஒரு முடிவுகளும் முழு பலனை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் உள்ள பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். திருமணம் முயற்சியில் நல்ல வரம் தேடி வரும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் பணம் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்களின் நிதிநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் தொடர்பாக யோசித்து செயல்படவும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு குறைவாக இருக்கும். குடும்பத்தில் சில நாட்களாக இருக்கும் மனவருத்தங்கள் விலகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக கவலைகள் விலகும்.

Share
Related Articles
tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 01.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 18, புதன் கிழமை, சந்திரன் ரிஷப...