இன்றைய ராசி பலன் : 09 பிப்ரவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 9.02.2025, குரோதி வருடம் தை மாதம் 27 ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த அனுஷம், கேட்டை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
Today Horoscope இன்றைய ராசி பலனை (பிப்ரவரி 8, 2025 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்தயோகம் கூடிய தினம். இன்று விருச்சிக ராசியினருக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சூழ்நிலை அதிகம் மாற்றங்கள் கூடியதாக இருக்கும். இருப்பினும் நன்மைகள் அதிகமாக நடக்கும். உங்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படவும். அதிர்ஷ்டத்தால் உங்கள் வேலைகள் எதிர்பார்த்த வகையில் முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். காதலில் புரிதல் அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனக்கவலையில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனதிற்கு அமைதி தரக்கூடிய நாள். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். இல்லையெனில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைந்ததாக அமையும். இன்று உங்களின் உடல் நலம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை தேவை.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இந்த சில விஷயங்கள் மனக்கவலைகள் தொந்தரவு செய்யும். வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும். இன்று உடல் நலம் பலவீனமாக இருக்கும். வேலை தொடர்பாக சில தடைகள் ஏற்படும். காதல் விஷயத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மனக்கவலைகள் அதிகரிக்க கூடிய நாள். உங்களின் மனநலனை மேம்படுத்த யோகா, தியானத்தை செய்ய முயற்சிக்கவும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். வேலை தொடர்பாக உங்களிடம் முயற்சிகள் பலனளிக்கும். குடும்ப சூழ்நிலை சாதகமாக அமையும். திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் உருவாகும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மனைவியின் ஆலோசனை உங்களுக்கு உதவும். மாணவர்கள் தேர்வில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலைகளை முடிப்பதில் சாதகமான சூழல் உருவாகும். அதிர்ஷ்டம் மேலாங்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது முழு கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் சில பதட்டமான சூழல் உருவாகும். குடும்பத்தில் வயதானவர்களின் உடல்நலம் சற்று மோசமடையும். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் சந்திக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். உங்கள் வேலையில் கடின உழைப்பால் சிறப்பான பலனை பெறுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு சிறந்த நாளாக அமையும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்துவீர்கள். வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மன வருத்தம் ஏற்படக்கூடியதாக அமையும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை உடல் நலனில் கவனம் தேவை. காதல் வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களை முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் வருமானம் எதிர்பார்த்த வகையில் கிடைக்க கடின உழைப்பு தேவைப்படும். வேலை தொடர்பான முயற்சிகள் பலனளிக்கும். குடும்ப பொறுப்புகள் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். வீட்டு சூழ்நிலை சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். உடல்நலம் மேம்படும். வேலை தொடர்பான விஷயத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வருமானம் அதிகரிப்பதால் மனம் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று உங்களின் சூழல் சிறப்பானதாக அமையும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பயணங்கள் சாதகமான பலனைத் தரும். இன்று செல்வாக்கு மிக்க நபர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மை தரும். திருமண வாழ்க்கையில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலை தொடர்பாக உங்களுக்கு சாதகமான நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், பதற்றம் நிறைந்திருக்கும். காதலில் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம்.
- 2023 rasi palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan sun tv
- indraya rasi palan tamil
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- rasi palan
- rasi palan 2025
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv indraya rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vidyadharan rasi palan