ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 11 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 11.11.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள சேர்ந்த பூசம், ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையை விட்டு மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால் உங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பணியிடத்தில் சில மாற்றங்களை செய்ய உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை தொடர்பாக அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மற்ற நாட்களை விட இன்று சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து தொடங்கக்கூடிய புதிய தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் வேலையில் ஆர்வம் குறையும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர் மற்றும் உயர் அதிகாரிகளின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். இன்று மதிப்பு மிக்க சில பரிசு கிடைக்கும். இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. சுற்றுலா செல்ல திட்டமிடுவதில் கவனம் தேவை. இன்று கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், உங்கள் ஆரம்பத்தையும், செலவுகளையும் குறைத்துக் கொள்ளவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்கள் மூலம் சில நல்ல செய்திகள் தேடி வரும். இன்று சகோதரர்களின் திருமணம் தொடர்பாக உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று புத்திசாலித்தனத்துடன் செயல்படவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகள் தொடர்பான உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். மனதில் சில பயம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். இன்று உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கடின உழைப்பிற்குப் பின்னர் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய நாள். உங்கள் சிறப்பான யோசனையை உடனடியாக செயல்படுத்தலாம். கூட்டு தொழில் செய்யக்கூடியவர்கள் சரியாக கலந்தாலோசித்தும், விட்டுக் கொடுத்து செல்வதும் நல்லது. இன்று எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆன்மீக விஷயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி, விளையாட்டு சாதனை நிகழ்த்துவார்கள். வியாபாரம் தொடர்பாக சில பயணங்கள், அலைச்சல்கள் ஏற்படுத்தும். இன்று சளி, காய்ச்சல் என உடல் ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்படும். புதிய வருமான வாய்ப்புகள் உண்டு. மனைவிக்கு பரிசு வழங்க திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வெற்றி அதிகரிக்க கூடிய நாள். உங்களுக்கு புகழ் கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும். உங்கள் பேச்சு இனிமையை கடைப்பிடிக்கவும். நாளை நேரத்தில் நண்பர்களுடன் உல்லாசமாகக் கழிப்பீர்கள். வெளிநாடு தொடர்பான வியாபாரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழுங்கள். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பணம் அதிகமாக செலவிடுவீர்கள். இன்று உங்கள் பணப்பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நீங்கள் எதிர்பார்த்த அரசு வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு ஏற்படும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பம், நிதி விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் உண்டு. வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலம் தரக்கூடிய நாள். உறவினர்களிடமிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். பயணம் சுகமானதாக இருக்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிப்பதில் சில தடைகள் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக கவலை ஏற்படலாம். பரிவர்த்தனைகள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் தேவையற்ற உறவில் விரிசல் ஏற்படலாம். ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். இன்று உங்களின் நிதிநிலை சீராக இருக்கும்.