இன்றைய ராசி பலன் : 31 ஜனவரி 2025 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 31.01. 2025, குரோதி வருடம் தை மாதம் 19 வெள்ளிக் கிழமை, சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சில ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முயற்சி எடுத்து வந்த வேலைகள் முடித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இன்று மூத்தவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று செலவு அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோருடன் புனித யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்பு உண்டு.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு பதவி, பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்கள் அமல்படுத்தச் சிறப்பான வெற்றிகள் எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்களின் ஆலோசனை பாராட்டைப் பெற்று தரும். கல்வி தொடர்பாக மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய வேலைகளை முடிப்பதில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் நண்பர்கள் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கடின முயற்சிக்கேற்ற நற்பெயர் பெறுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று ஆன்மீகம், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் உங்கள் வேலையில் மேலதிகாரிகளின் தலையீடு இருக்கும்.இது உங்கள் பணியிடத்தில் தடைகளை உருவாக்கும். உங்கள் வேலைகளை கண்ணும், கருத்துமாக செய்து முடிக்க முயற்சி செய்யவும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்கவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்கள் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் திட்டமிட்டு செயல்படவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரம், தொழிலில் தங்கள் கூட்டாளிகளைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மூதாதையர்களின் சொத்து தொடர்பான தகராறுகள் இன்று முடிவுக்கு வரும். இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் சாதகமான பலனை தரும். வேலை தொடர்பாக புதிய திட்டத்தில் சிறப்பான வெற்றியை பெறலாம். இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, தொழில் தொடர்பாக புதுமையை புகுத்தினால் அதில் வெற்றியை பெறலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும். இன்று நாள் முழுவதும் வியாபாரம் தொடர்பாக சிறப்பான லாபத்தை பெற்றிடலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வழக்கத்தைத் தாண்டி புதிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். இன்று எதிலும் எதிர்பார்த்த லாபம் பெறலாம். வணிகத்தில் பணம் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். இன்று தொழில் தொடர்பாக எந்த ஒரு ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள்.உங்கள் செயலில் பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும். இன்று துணையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். உங்களின் பண வருவாய் அதிகரிக்கும். இன்று பதற்றத்தை விடுத்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் செயலில் பதற்றம், கோபம் அதிகமாக இருக்கும். இன்று முடிவு எடுப்பதில் எந்த ஒரு அவசரத்தையும் காட்ட வேண்டாம். சிந்தனையுடன் செயல்பட வேண்டிய நாள். உடல்நலம், உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தொழில் தொடர்பாக சிந்தித்து செயல்படவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குழப்பமான சூழல் விலகும். இன்று நிதானமாக, புத்திசாலித்தனமாக எடுக்க கூடிய முடிவுகள் மூலம் நற்பலனை பெறுவீர்கள் உங்கள் வீட்டில் இனிமையை கடைப்பிடிக்கவும். வீட்டில் பூஜை, சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்தத் தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- 2023 rasi palan
- 2025 rasi palan
- daily rasi palan
- daily rasi palan tamil
- Featured
- indraya rasi palan
- indraya rasi palan tamil
- kumba raasi palan
- nalaiya rasi palan
- pugazh media rasi palan
- puthandu rasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today sun tv
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- tamil rasi palan
- today palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- Today Rasi Palan Tamil
- vidyadharan rasi palan