ஜோதிடம்

இன்றைய ராசி பலன் : 29 ஜனவரி 2025 – Daily Horoscope

Share
tamilnaadi 9 scaled
Share

இன்றைய ராசிபலன் 29.01.2025, குரோதி வருடம் தை மாதம் 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் ஆடம்பரமான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியாக இருக்கும். மூதாதையர்களின் சொத்து, பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்க வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் சோகமாக உணர்வீர்கள். இன்று உங்களின் கவலை அதிகரிக்கும். உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டிய நாள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மாணவர்கள் படிப்பையும் முன்னேற்றம் அடைவார்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சில முக்கிய மாற்றங்கள் நடக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பில்லை. இன்று சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதே சமயம் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணத்தை முதலீடு செய்ய தயாராக இருப்பீர்கள். அது தொடர்பாக துறை வல்லுநர்கள், நிதி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு ஆறுதலைத் தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கக்கூடிய நாள். பிள்ளைகளுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் தொழில் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவியின் செயல்பாடு, அவரின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்கிறீர்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் வெற்றி கிடைக்கும். இன்று பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் குடும்ப பொறுப்புகளை முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பாக அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். இன்று நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றியும், நிதிநிலை முன்னேற்றமும் ஏற்படும். சொத்து தொடர்பான தகராறுகள் தீரும். அதற்கு மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புரிதலும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கடின உழைப்பு தேவைப்படும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த தொழிலை செய்தாலும் அதில் மகத்தான லாபத்தைப் பெறுவீர்கள். இன்று கடன் கொடுத்தால் அது திரும்ப பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் மாலை நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர் கொண்டு முன்னேறுவீர்கள். பயமில்லாமல் செய்யக்கூடிய இந்த செயலிலும் வெற்றி உண்டாகும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டி, தேர்வு தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் அடைவார்கள். இன்று உங்களுக்கு உடல் ரீதியாக, மனரீதியாகச் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் வேலையை தள்ளிப்பட வேண்டாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு சேவை செய்வதில் நேரத்தைச் செலவிடுவீர்கள். அதே சமயம் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க கண்ணும் கருத்துமாகச் செயல்படவும். இன்று பண விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சில மோசமான விஷயம் கேட்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் செயல்பாடு மகிழ்ச்சியை தரும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுக்காக சில முக்கிய வேலைகள் ஒதுக்கப்படலாம். அதை முடிக்க ஊழியர்களின் உதவி தேவைப்படும். அதனால் அனுசரித்துச் செல்லவும். இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலையை முடித்து வெற்றி பெறுவதற்கு. தொழில் முதலீடு செய்யும் விஷயத்தில் கவனம் தேவை.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு கடினமான நாளாக இருக்கும். எதிர்மறை விமர்சனங்கள் அல்லது பதட்டமான சூழல் இருக்கும். சொத்து தொடர்பான தகராறுகள் தீர காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவி, ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உங்களின் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப சொத்து தொடர்பான தகராறுகள் விலகும். உங்கள் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ள. இன்று கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்க்கவும். பண பற்றாக்குறையைச் சந்திக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் முன்னேற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். கல்வி தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வேலை தொடர்பான விஷயத்தில் கவனமாக செயல்படவும்.

Share
Related Articles
tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 06 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 04 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 4.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 21, ஞாயிற்று கிழமை, சந்திரன் கடகம்...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 03 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 20, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...

tamilnaadi 1
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 02 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 2.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 19, வியாழக் கிழமை, சந்திரன் மிதுனம்...