ஜோதிடம்
இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயலில் சில தடைகளுக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் உல்லாசமாக செலவிடுவீர்கள். மாணவர்கள் படிப்பு தொடர்பாக சிறப்பான நாளாக அமையும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பல நல்ல செய்திகள் தேடி வரும். இதனால் மன மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். குடும்பத்தில் மூத்தவர்களிடம் இருந்து ஆலோசனையும், சில நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள். காதல் வாழ்க்கையில் துணையுடன் நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். இன்று உங்களின் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். தேர்வில் சிறப்பான வெற்றியை பெற முடியும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் செயலில் துணையின் மூலம் ஆதரவு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல்நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். இன்று உங்களின் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள். சூழ்நிலை சாதகமாக அமையும். இன்று உங்களின் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஆலோசனை உங்களுக்கு உதவும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் பிறரின் சிறப்பான யோசனையை பரிசீலிக்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பதில் உறுதியுடன் செயல்படவும். இன்று பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். இன்று உங்களின் முக்கிய வேலைகளை தள்ளிப்பட வேண்டாம். வியாபாரத்திற்காக எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களின் மனதை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இன்று பிறருக்கு உதவவும் முன் வருவீர்கள். குடும்பத்தில் பதட்டமான சூழல் இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பத் தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. சிலரிடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. மேலதிகாரிகளின் நல்ல ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபகரமான ஒப்பந்தங்கள் பெற வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று பணம் சம்பாதிப்பதில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை முன்னேற்றத்தால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றிய மகிழ்வீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிப்பதோடு, யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் உங்களுக்கு தொந்தரவு தர முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று நிதானமாக நடந்து கொள்ளவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பு விஷயத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிட நினைப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக இருந்த இடையூறுகள் நீங்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். துன்பம் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். பெற்றோரின் சேவையில் ஈடுபடுவது நன்மை தரும்
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒவ்வொரு வேலையிலும் கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களின் முயற்சிக்கு ஏற்ற சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மன வருத்தம் விலகும்.