ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 8 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 8.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 22 வெள்ளிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் மிருகசீரிடம், திருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பு தொடர்பான விஷயத்தில், உங்கள் முயற்சிக்கு ஏற்ற சிறப்பான பலன் கிடைக்கும். வேலையில் வெற்றி நிச்சயம். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சொத்து வாங்குதல் அல்லது விற்பது தொடர்பாக கவனம் தேவை. ஆவணங்களை முறையாக சரி பார்க்கவும். பிறருக்கு கொடுத்த கடன் தடை திரும்ப பெற வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த வாக்குவாதம், மனவருத்தம் முடிவுக்கு வரும். இன்று உங்கள் மன பயம் விலகும். நேர்மறையான சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இன்று உங்களின் சுயமரியாதை அதிகரிக்கும். உங்கள் வேலையில் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு நிறைந்திருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க எல்லாம் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இன்று சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக செயல்படுவோம். சமூகம் பணி, ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான செயல்களில் நற்பலனைப் பெறுவீர்கள். திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உடல் நலம் தொடர்பான கவலை ஏற்படும். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் தேவை. குடும்பத்தில் ஒருவருடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் நம்பிக்கையும், அன்பு அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை முடிப்பதில் பரபரப்பான நாளாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான முக்கிய வேலைகள் முடித்து மகிழ்ச்சியடைவீர்கள். இன்று விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்திலும், வெளியிலும் பிறரிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் வேலையில் பதவி உயர்வு, மரியாதை கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் அடையலாம். வெற்றி நிறைய கூடிய நாள். வேலை தொடர்பான மும்முரமான நாளுக்கு மத்தியில் காதலுக்காகவும் நேரத்தை ஒதுக்க நினைப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் பெறுவீர்கள். பிறருக்கு கொடுத்த கடன் திரும்ப பெற வாய்ப்புள்ளது. இன்று உங்களின் செல்வம் பெருகும். நிதிநிலை வலுவாக இருக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் முழு உழைப்பும், நற்பணிப்பும் தேவைப்படும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு தந்தையின் ஆலோசனை உதவும். பிள்ளைகளின் பொறுப்பை நிறைவேற்றுவீர்கள். கடின உழைப்பிற்கான நற்பலனை பெற முடியும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில், பொறுப்புகளில் கவனம் தேவை. ஏனெனில் இன்ற தந்தையுடன் அல்லது மேலதிகாரிகளுடன் தேவையற்ற பிரச்சினைகள் அல்லது சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்வாதாரம் தொடர்பான துறையில் நல்ல சலுகை கிடைக்கும். பகுதி நேர வேலை செய்ய நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உடல்நிலையில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மரியாதை, பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் அதிகமாகவே செலவாகும். உங்கள் மனைவியுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் மற்றும் மங்கள நிகழ்வுகள் குறித்து விவாதிப்பீர்கள். இன்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறவுகளில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். உங்கள் உறவில் காதல் அதிகரிக்கும். எந்த வேலையும் புத்திசாலித்தனத்துடனும், திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் பண பற்றாக்குறை சந்திக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களின் நல்ல ஆதரவைப் பெறுவார்கள். குழந்தைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்க வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிகபட்சமான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சிறப்பான வாய்ப்புகளும், வசதிகளும் பெறுவார்கள். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். உங்கள் வரவு மற்றும் செலவு விஷயத்தில் கவனம் தேவை. எதிர்காலத்தில் தேவையற்ற பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ஆச்சரியமான நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். கூட்டுத்தொழில் செய்யக்கூடியவர்களுக்குச் சிறப்பான நாள். எதிர்காலம் தொடர்பாக நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் நற்பலனை தரும். உங்கள் குழந்தைகளின் உடல்நல பிரச்சனைகள் தீரும். அரசியலில் உள்ளவர்களுக்கு சில பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.