ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 7.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 21, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷப ராசியில் ரோகிணி, மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எதிர்மறை எண்ணங்கள், உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்க்கவும். இன்று நேர்மறையான சிந்தனையில் எல்லா விஷயத்தையும் அனுகவும். வியாபாரம் தொடர்பாக சில சமரசம் செய்ய நேரிடும். பிறரை ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். உங்களின் கருத்தை வலுவாக முன்வைக்க தயங்காதீர்கள். வணிகத்தில் உங்கள் வேகத்தை அதிகரிக்க முடியும். சமூகத்தில் மரியாதையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் உள்ள சிரமங்கள், பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். இன்றைய நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த செயலிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். வீட்டை விட்டு கிளம்பும் போது விநாயகர் வழிபாடு செய்துவிட்டு செல்வது நல்லது. நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். உங்களின் நிதிநிலை வலுவாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை தொடர்பான திட்டங்களை ரகசியமாக செயல்படுத்துவது நல்லது. பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலும், உங்கள் எண்ணங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில விஷயங்களில் நண்பர்கள் எதிரியாக மாற வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமையைச் சந்திக்க வாய்ப்புள்ளது. குழுவாக செயல்படக்கூடிய வேலையை சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியிடத்திலும் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடாது முடியும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் குறித்த விவாதங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் ஏற்படும். மாலை நேரத்தில் பெற்றோர் சேவையில் ஈடுபடுபவர்கள். இன்று உங்கள் மன அமைதி அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சட்ட சிக்கல் தொடர்பான விஷயத்தில் ஈடுபட வேண்டாம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பேச்சில் மென்மையே கடைப்பிடிக்கவும். மாணவர்கள் படிப்பு மற்றும் எந்த ஒரு போட்டியிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் மனக்கவலை ஏற்படும். நிதி ரீதியாக சிறப்பான நாள். உங்களின் குடும்ப வியாபாரம் தொடர்பாக சகோதரர்களின் உதவி தேவைப்படும். ஆன்மீக செயல்பாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நேரத்தை சரியாக பயன்படுத்தி உழைக்கவும். உங்கள் வேலையில் சிரமங்களை சந்தித்தாலும், உங்கள் முயற்சியால் வெற்றியை பெறலாம். வியாபாரத்தில் லாபம் நிறைந்ததாக இருக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பணம் அதிகமாக செலவாகும். காதல் வாழ்க்கையில் தேவையற்ற மன வருத்தம், பதற்றமான சூழல் இருக்கும். இன்று மாலை நேரத்தில் நண்பர்களுடன் உல்லாசமாகக் கழிப்பீர்கள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையை நிரூபிக்க முடியும். கடின உழைப்புடன் செய்யக்கூடிய வேலையில் பெரிய நற்பலனை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அரசு தொடர்பான பணிகள் நிறைவேற்ற முடியும். இன்று வண்டி, வாகன பழுதால் சிரமங்கள் ஏற்படும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நீங்கும். சொத்து சம்பந்தமாக சிறப்பான நாளாக இருக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆவணங்களைச் சரி பார்ப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனநிலையில் கோபமும், எரிச்சலும் அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் நினைத்த சில வேலைகள் செய்து முடிக்க முடியாமல் போகலாம். முக்கிய வேலைகளை சரியாக திட்டமிட்டு செய்யவும். குடும்பத்தில் சிலருடன் மனக்கசப்பு ஏற்படலாம். இன்று உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பது நல்லது. இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பணம் சம்பந்தமான விஷயங்களில் சற்று மன வருத்தம் ஏற்படும். தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தந்தையின் ஆலோசனை நற்பலனை தரும். பணியிடத்தில் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் வேலைகள் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் புத்திசாலித்தனத்தால் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று அழுத்தம் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் போகலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உங்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலையில் பராமரிப்பது நல்லது. இன்று உங்களின் சிறப்பான பண வரவு மூலம் அன்றாட செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும். உங்கள் செலவை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பிள்ளைகள் தொடர்பாக சில முக்கிய வேலைகளுக்காக பயணம் செல்ல நேரிடும். உங்கள் அன்றாட பணி மற்றும் நடவடிக்கைகளில் மாற்றங்களை செய்ய வேண்டியது இருக்கும். இன்று பிறரிடம் செய்யக்கூடிய பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலை பராமரிப்பது நல்லது. நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். எதிலாவது பணம் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான நாளாக அமையும்.