ஜோதிடம்
இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் : 20 செப்டம்பர் 2024 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 13, 2024, குரோதி வருடம் புரட்டாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் பூரம்,உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் முக்கியத்துவத்தைப் பிறர் உணர்ந்து கொள்வார்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். சிலர் உங்களின் வேலையில் தலையிட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற அவதூறுகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படும். வீட்டில் குழப்பமான சூழல் இருக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் மனக்கவலையைத் தரும். வீட்டு பெரியவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். இன்று முக்கிய வேலைகளை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்யவும். இன்று உங்களின் தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். உங்கள் உத்தியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும். பண ஆதாயம் குறைவாக இருக்கும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கடந்த சில நாட்களை விட இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். முக்கியமான பணிகளில் சில குழப்பமான சூழல் இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான சூழல் இருக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இன்று நண்பர்களின் வார்த்தைகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயலில் கவனம் தேவை. வியாபாரத்தில் வருமானத்தில் குறை இருக்காது. திடீர் லாபங்கள் கிடைக்கும். பணம் தொடர்பாக வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று உங்களின் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபடடு இருக்கும். இன்று பொழுதுபோக்கு தொடர்பாக அதிக நேரம் வீணடிப்பீர்கள். உங்கள் வேலை, வியாபாரத்தில் அவசரமாக செயல்பட வேண்டாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. அதனால் உங்களின் எந்த செயலிலும் நிதானமும், கவனமும் தேவை. உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலம் தொடர்பாக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு ஆறுதலைத் தரவும். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் பண பிரச்சனை குறைந்து மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் எதிர்பார்ப்புக்கு மாறான சூழல் நிலவும். இன்று உங்களின் மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதி காத்திட உங்களின் செலவு மற்றும் தேவைகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். நிதி விஷயங்கள் தொடர்பாக அதிகம் கவலைப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் நல பிரச்சனை கவலை தரும். இன்று எந்த ஒரு ஆபத்தான வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அனைத்து வேலைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். சில முக்கிய வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது. சில நாளாக காத்திருந்த விஷயங்கள் நிறைவேறி மகிழ்வீர்கள். வீட்டிலும், வெளியிலும் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்கள் வேலையில் சோர்வு அதிகரிக்கும். வண்டி, வாகன சேர்க்கை உண்டு.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். உங்களின் விருப்பம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சில தவறான புரிதல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலையை முடிப்பதில் கவனம் தேவை. மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். அரசு வேலை தொடர்பாக முயற்சிகள் சாதக பலனை தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். இன்று நல்ல செய்தி தேடி வரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் விருப்பத்திற்கு எதிரான செயல்களை செய்ய நேரிடும். இதனால் மனம் குற்ற உணர்வு அடையும். உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கவனமுடன் செயல்படவும். வேலை, வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். வீண் பேச்சை தவிர்க்கவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமற்ற, எதிர்பார்த்த பலன் கிடைக்காத நாளாக இருக்கும். அனைத்து வேலைகளையும் கவனமாக செய்து முடிக்கவும். பயணங்களில் கவனம் தேவை. இயந்திரம், மின்சாரம், நெருப்பு போன்ற ஆபத்தான வேலைகளில் கவனம் தேவை. இன்று தேவையற்ற இழப்பைச் சந்திக்க நேரிடும். நான் எந்த வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. . உடல் நலனில் அக்கறை தேவை.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். இந்த முடிவையும் நிதானமாக எடுக்கவும். உங்களின் பணம் ஆதாயம் அதிகரிக்கும். புதிய வேலை, தொழில் செய்ய வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக அதிக செலவு செய்வீர்கள். விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஈகோவை மறந்து அனுசரித்துச் செல்லவும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று செல்வ, செழிப்பு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற அதிக செலவு செய்வீர்கள். இன்று உங்களின் வரவு குறைவாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்பு தேவைப்படும். வணிகத்தில் உங்களின் அடையாளத்தைப் படிக்க முயற்சி செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.