ஜோதிடம்
இன்றைய ராசி பலன் 05.10.2023 – Today Rasi Palan
இன்றைய ராசி பலன் 05.10.2023 – Today Rasi Palan
இன்றைய ராசிபலன் அக்டோபர் 05, 2023, சோபகிருது வருடம் புரட்டாசி 18 புதன் கிழமை, சந்திரன் மிதுன ராசியில் உள்ள மிருகசீரிஷம் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள சுவாதி, விசாகம் சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. மனக்குறைகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். மிதுன ராசியில் சந்திரன் சஞ்சரிக்கக்கூடிய இன்றைய தினத்தில் வெற்றியைத் தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று மனக்குழப்பங்கள் இருந்தாலும் பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்த குழப்பங்கள் தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். 6ம் இடத்தில் இருக்கக்கூடிய கேதுவின் சஞ்சாரத்தால் உங்களுக்கு சில பண கஷ்டங்களோ, நண்பர்களால் மன உளைச்சலோ ஏற்படலாம். மூன்றாம் நபரின் தலையீட்டால் இந்த பிரச்னை தீரும். சந்திரன் 2ம் இடத்தில் இருப்பதால் சில மனக்குழப்பங்கள் ஏற்படும். பெரிய பாதிப்புகள் உண்டாகாது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியிலேயே சந்திரனின் சஞ்சாரம் செய்வதால் பல குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், திருமணம், குழந்தைகளின் கல்வி தொடர்பாக மனதில் குழப்பங்களோ, பய உணர்வோ அவ்வப்போது வந்து செல்லும். காலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
இன்று சிவ பெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய மனக்குழப்பங்கள், கஷ்டங்கள் தீரும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி நாதன் சந்திரன் 12ம் இடமான விரயத்தில் இருப்பதால், விரய செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும். மனக்குறை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளை இன்றைய நாளில் தவிர்ப்பது நல்லது. புதிய மனிதர்களின் நட்பு இன்று கிடைக்கும். இதன் மூலம் வேலை விஷயங்களில் நல்லது நடக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மகம், பூரம் நட்சத்திரத்தினருக்கு மன அமைதி கிடைக்கும். உத்திர நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெற்றோர்களிடம் இருந்த மனக்கஷ்டங்கள், வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதனால் பேச்சில் இனிமை, மெளனமாக இருப்பது நல்லது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறுசிறு குடும்ப பிரச்னைகள் தீரும். இன்று அன்னதானம் செய்வது நல்லது. பல நாட்களாக இருந்து வந்த வழக்குகள், விசாரணைகளில் இழுபறியான சூழல் இருக்கும் என்பதால் மன சஞ்சலம் ஏற்படும். பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய பிரச்னைகள் தீரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல மன ஆரோக்கியம் கிடைக்கும். மனபயம் தீரும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உங்கள் ராசிக்கு உள்ளதால் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்று அகோர வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றுதல், பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய மன பயம், கவலை தீர்ந்து நன்மை உண்டாகும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் சிறுசிறு குழப்பங்கள் வந்து செல்லும். பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. உங்களின் நல்ல எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களின் மனதிற்கு திருப்தியை தரும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மன ஆறுதலும், வெற்றியும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சந்திரனின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன் – மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். மன மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். குல தெய்வ பிரார்த்தனை செய்யவும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பல நாட்களாக இருந்து வந்த குடும்ப பிரச்னைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். சந்திர பகவானின் அமைப்பு தன லாபத்தை கொடுத்தாலும் கூட பெரியளவில் மன பாரம், சங்கடம் ஏற்படாது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். காலை வேளையில் எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் ஒருசிலருக்கு ஏற்படும். பயணம் அனுகூலத்தைத் தரும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரக்கூடிய நாளாக இருக்கும். மறைவு ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் சகோதர, சகோதரிகளிடையே இருக்கும் பிரச்னைகளை தவிர்க்கவும். வியாழக்கிழமையான இன்று நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடும், அரிசி தானமும் செய்வது நல்லது. மகாளய பட்ச காலத்தில் அரிசி தானம் செய்யவும்.