ஜோதிடம்
20-12-2022 இன்றைய ராசி பலன்
மேஷம்
வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்
அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.
மிதுனம்
நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
கடகம்
வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.
கன்னி
வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி வியப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.
துலாம்
உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
தனுசு
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
மகரம்
வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நன்மைகள் நடக்கும் நாள்.
மீனம்
சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.
You must be logged in to post a comment Login