1733735 manjal
ஜோதிடம்

வீட்டில் உள்ளபிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள்

Share

மங்கலப் பொருட்களின் வரிசையில் முன்னணியில் நிற்பது மஞ்சள். பெண்கள் முன்பெல்லாம் முகத்திற்கு கிருமி நாசினியான மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம். தற்போது நாகரீக மாற்றத்தால் பலர் அதை கடைபிடிக்க தவறுகின்றனர்.

மஞ்சள் பூசிய முகத்தில் தெய்வ கடாட்சம் பெருகும். மகாலட்சுமி வாசம் செய்வாள். முகத்தில் தேஜஸ் பெருகும். அழகு அதிகரிக்கும். மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறப் பொருட்களில் குருவின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும்.

குருவின் ஆதிக்கம் நிறைந்த மஞ்சளை பெண்கள் பூசி குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் மிகுந்து இருந்தால், மனைவி மஞ்சள் அரைத்து குழைத்து முகம் முழுவதும் தேய்த்து குளித்து வர சச்சரவு நீங்கி தாம்பத்தியம் சிறக்கும்.

பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் , பீரோவில் மஞ்சள் வைக்க நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகி ஐஸ்வர்யம் பெருகும்.

வீட்டில் முனை முறியாத பச்சரிசியில் மஞ்சள் கலந்து அட்சதை வைக்கும் பொழுது மங்கள நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் மஞ்சள் ஜாதகத்தில் சனி ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்கக் கூடியது.

ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் பாதிப்பு குறைந்து வெற்றிகள் உண்டாகும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
horoscope 2026 predictions 1763385900
ஜோதிடம்

2026 திரிகிரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – குவியப்போகும் செல்வம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 2026 ஆம் ஆண்டு நிகழவுள்ள ‘திரிகிரக யோகம்’ சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது....

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 01 டிசம்பர் 2025 : 12 ராசிகளுக்கு வருமானம் உயரும்

இன்று டிசம்பர் 01, கார்த்திகை மாதம் 15, சந்திர பகவான் மீன ராசி ராசியில் ரேவதி...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 14 நவம்பர் 2025 : லட்சுமி தேவியின் அருளால் லாபம் சேரக்கூடிய ராசிகள்

இன்று 2025 நவம்பர் 14ம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திர பகவான் சிம்ம ராசியில் பூரம் நட்சத்திரத்தில்...

tamilnaadi
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 13 நவம்பர் 2025 – வேலையில் கவனம் தேவைப்படும் ராசிகள்

இன்று நவம்பர் 13ம் தேதி, ஐப்பசி மாதம் 27 சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்...