கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் கூறினார். இதையடுத்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கினார்.
இந்த நிலையில் டிரம்ப் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம் குறித்து எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டிரம்ப் மீதான டுவிட்டர் தடையானது ஒரு மிகப்பெரிய தவறு. அது திருத்தப்பட வேண்டும். அவர் சட்டத்தை மீறவில்லை என்றாலும் அவரது கணக்கை தடை செய்ததில் டுவிட்டர் ஒரு பெரிய தவறை செய்துள்ளது – என்றார்.
#world
Leave a comment