தொழில்நுட்பம்

மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி – புதிய அப்டேடுடன் வாட்ஸ்அப் அசத்தல்

Share
500x300 1723690 1716447 newproject 2022 06 21t154144860
Share

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சோதனை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது.

அதன்படி எடிட் செய்யப்படும் மெசேஜ்களில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. மேலும் குறுந்தகவலை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை எடிட் செய்ய முடியும்.

“எடிட் மெசேஜ்” அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவலை குறிப்பிட்ட காலக்கட்டம் வரை எடிட் செய்ய முடியும். இந்த அம்சம் “டெலிட் மெசேஜ்” அம்சத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் இந்த அம்சத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்படும் குறுந்தகவலில் எடிட் செய்யப்பட்டதை குறிக்கும் லேபல் இடம்பெற்று இருக்கிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கும் பணிகளில் இருப்பதால் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப் செயலியின் பிஸ்னஸ் வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் சந்தா முறையை வழங்க துவங்கியது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...