9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

Share

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த செயலியாக இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.

உலகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டொக்கை பின்தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பதிவுசெய்துள்ளது.

அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023இல் 20 சதவீதம் அதிகரித்துள்ளதோடு, மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.

இதன்படி இன்ஸ்டாகிராம் செயலி 767 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், டிக்டொக் 733 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமின் இந்த அபார வளர்ச்சிக்கு அதன் ”ரீல்ஸ் அம்சம்” முக்கிய காரணமாக உள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் கடந்த சில ஆண்டுகளாக டிக்டொக்கை மிஞ்சும் வகையில் அதிகமாக காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.

அதன் ரீல்ஸ் அம்சம் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்று சென்சார் டவரின் மூத்த நுண்ணறிவு அதிகாரி ஆபிரகாம் யூசெப் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...