கட்டுரை
மனித மூளையில் சிப் ! எலன் மஸ்கின் நிறுவனத்திற்கு அனுமதி
மனித மூளையில் சிப் ! எலன் மஸ்கின் நிறுவனத்திற்கு அனுமதி
மனித மூளையில் சிப்களை பொருத்தி சோதனை செய்ய பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க முடியும் என எலன் மஸ்கின் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.
இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் ‘சிப்’பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நினைவாற்றல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என தெரிவிக்கப்படுகின்றது.