tamilni 268 scaled
இலங்கைசெய்திகள்

திலீபனின் நினைவேந்தல் ஊர்தியால் தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு

Share

திலீபனின் நினைவேந்தல் ஊர்தியால் தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகின்றமையினால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், திலீபனின் நினைவேந்தல் தற்போது அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபன் இருந்தாலும் அவர் அஹிம்சை வழியில் போராடி இறுதியில் உயிர் தியாகம் செய்தார். திலீபனின் நினைவேந்தல் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

திலீபனின் உருவப்படத்தை சுமந்த வண்ணம் ஊர்தி பவனி மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் போது தம்பலகாமம் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிங்களவர்கள் தம்பலகாமம் பகுதியில் வாழ்கிறார்கள். சிங்களவர்கள் அதிகளவில் வாழும் பகுதிக்கு செல்லாமல் இந்த ஊர்தி பேரணி திருகோணமலைக்கு சென்றிருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செல்லாமல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சிங்களவர்களின் கோபத்தை தூண்டி விடும் வகையில் இந்த பவனி சென்றுள்ளது.

நான் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் உரையாற்றவில்லை. திலீபனின் நினைவு ஊர்தி பவனிக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.

இந்த பவனியால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது. அனுமதி பெறாத ஒரு பவனிக்கு பொலிஸார் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். திலீபனின் நினைவேந்தல் பவனி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....