tamilni 270 scaled
உலகம்செய்திகள்

உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்

Share

உலக சாதனை படைத்துள்ள வெங்காயம்

இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இப்போட்டியில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை காட்சிபடுத்தியுள்ளார்.

குறித்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்ததுடன் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு 2014 – ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...