harsh jain
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு!

Share

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.

இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்,” என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

#technology

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...