ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் டெஸ்லா நிறுவனத்தின் CEO வான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளார்.
இந்த பங்குகள் கொள்வனவின் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் முழு உரிமையாளராகவும் எலான் மஸ்க் மாறியுள்ளார்.
எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விரும்புகிறேன் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் எலான் மஸ்கின் பங்குகளின் விலையை அதிகரித்தும், மற்றவர்களுக்கு பங்கு விலையை குறைக்கவும் முயன்றனர்.
ஆனால் மொத்த தொகையான 44 பில்லியன் டொலரையும் உடனடியாக உரிய முறையில் வழங்க தயார் என எலான் மஸ்க் தெரிவித்ததுடன், ஏனைய பங்குதாரர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களை சம்மதிக்க வைத்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் வேண்டுகோளை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொண்ட நாளையில், ட்விட்டர் நிறுவனத்தின் ஒரே முதலாளியாக எலான் மஸ்க் மாறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்குள் என்ட்ரி ஆனார் எலான் மஸ்க். இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் முதலாளியாக மாறியுள்ளார்.
“என்னை மிக மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருப்பதையே நான் விரும்புகிறேன், காரணம் அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம்” என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment