உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை-/aw செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இன்னும் கூட நம்மில் பலருக்கு நம்மை தாக்கும் அபாயகரமான நோய்கள் குறித்தும் நோய் கிருமிகள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதே உண்மை. அப்படி உலகையே ஆட்டிப்படைக்கு நோய் தொற்றுக்களில் ஒன்றுதான் எய்ட்ஸ் நோய்.-/e>-p>எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி என்ற இரண்டும் ஒன்று தான் என்ற தவறான புரிதல் படித்தவர்கள், பாமரர்கள் என எல்லோர் மத்தியிலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்த எச் .ஐ. வி மற்றும் எய்ட்ஸ் பற்றி மக்களுக்கு இருக்கும் அச்சத்தின் காரணமாக அது பற்றிய ஏராளமான வதந்திகள் பரவத்தொடங்கி உலகெங்கும் உலாவிக்கொண்டிருக்கின்றன.-/e>-p>எச் . ஐ. வி பற்றி மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால் தொடுதல், வியர்வை, அல்லது உமிழ்நீர் வழியாக இது பரவும் என்பது தான்.-/e>-p>ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த வகையிலும் பரவாது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.-/e>-p>எச் . ஐ. வி பாதித்த நபர் தங்கியிருக்கு பகுதியில் தங்குவது, அவர் பாவித்த எந்த பொருளையும் தொடுவது அவரில் தண்ணீர் போத்தலை பயன்படுத்துவது எச்.ஐ. வி பாதித்த நபருடன் கை குலுக்குவது அல்லது கட்டிப்பிடிப்பது அவர்களுடன் ஒரே பாத்திரங்களை பகிர்வது போன்ற செய்யற்படுகள் மூலம் எச் . ஐ. வி பரவாது என்பதே உண்மை. பெரும்பாலும் எச். ஐ. வி நோய் தொற்று உடல் உறவின் போதே ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கான ஒரே வழி ஆணுறைகளை பயன்படுத்துவது தான்.-/e>-p>பெரும்பாலான ஆரோக்கியமான மனிதர்கள் பாதுகாப்பற்ற உடலுறவு முறைகளால் எச். ஐ. வி தொற்றால் பாதிக்கப்படுவதற்கு இதனை தடுப்பதற்கு ஆணுறைகளை பயன்படுத்துவது தான் ஒரே வழி .-/e>-p>என்றாலும் எச். ஐ. வி யை தவிர்ப்பதற்ககு இது மட்டுமே வழி அல்ல.யாராவது எச். ஐ. வி நோய் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகளோடும் ஆபத்திலும் இருந்தால் அவர் ப்ரீ எக்ஸ்போஷர் (PrEP) மருந்துகளை எடுப்பது நல்லது போஸ்ட் எக்ஸ்போஷர் ப்ரோபிலாக்ஸிஸ் (PEP) என்பது மற்றுமொரு அவசரகால மருந்தாகும். இது பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின்னர் அல்லது பிற பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் எடுக்கும் மருந்தாகும்.-/e>-p>இந்த மருந்தை உடனேயே உட்கொள்ள வேண்டும். அதை 28 நாட்கள் வரை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். மேலும் எச். ஐ. வி பாதித்த ஒரு தாய் அந்த பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக ஒரு குழந்தையை பெற முடியாது.-/e>-p>எனினும் சரியான சிகிச்சையை தொடங்கினால் குழந்தைக்கு தாய்யிடமிருந்து எச். ஐ. வி தொற்று பரவுவதை தடுக்க முடியும் . எச். ஐ. வி பாதித்த தாய் தனது கர்ப்ப காலம் முழுவதும் மற்றும் குழந்தை பிறப்புக்கு பின்னரும் 4-6 வாரங்கள் வரை தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைக்கு எச். ஐ. வி தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.-/e>-p>குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பரிசோதனை மூலம் எச். ஐ. வி தொற்று கண்டறியப்பட்டால் உடனே அதற்குரிய தக்க மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தை பிறந்த பின்னர் தாய் பாலுட்டுவது தவிர்க்கப்படல் நல்லது.-/e>-p>இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைபடி தாய் மருந்துகளை எடுத்துக்கொண்டால் அந்த எச். ஐ. வி பாதிப்பை குழந்தைக்கு வராமல் தடுக்க முடியும். எச். ஐ. வி என்பது ஹியூமன் இம்யூனோ டிஃப்சியன்சி வைரஸ் என்பதையும் எய்ட்ஸ் என்பது அக்யூர்ட் இம்யூனோடிஃப்சியன்சி ஸிண்ட்ரோம் நோயையும் குறிக்கிறது. எச். ஐ. வி வைரஸ் தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம் என்றாலும் இரண்டுமே ஒன்று தான் என்று அர்த்தமல்ல.-/e>-p>எச். ஐ. வி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றார். இது ஒருவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மோசமடைய செய்துவிடும். இதனை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் எய்ட்ஸ் அபாயத்தை குறைக்க முடியும்.-/e>-p>மற்ற சில வைரஸ்கள் நம்முடைய உடலை தாக்குகின்ற பொழுது அது எப்படி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி நம்மைபலவீனப்படுத்துகிறதோ அதுபோலத்தான் இதுவும். அப்படி அந்த குறிப்பிட்ட வைரஸால் பாதிக்கப்படுகின்ற ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைந்து அது எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கிறது அன்று தான் அர்த்தம்.-/e>-p>இது பரவுவதால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் இந்நோயின் பொதுவான அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் அதன் பாதிப்புகளை ஓரளவு தவிர்த்திட முடியும். இந்நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை உணர்ந்து கொண்டால் சிகிச்சை செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். எச். ஐ. வி நோய் உள்ளதா என பரிசோதனை செய்வதே நம்மவர் மத்தியில் கூச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முட்டாள் தனமான பல கருத்துக்கள் சமூகத்தில் உலாவுகின்றது.-/e>-p>இருப்பினும் வேறு பல வழிகளிலும் இந்நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்த முடியும். இன்று அரச மருத்துவமனைகளிலும் எச். ஐ.வி பரிசோதனை செய்யவும் உரிய சிகிச்சை அளிக்கவும் வசதிகள் இருப்பதோடு நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் வசதிகள் உள்ளன. எச். ஐ. வி யை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்தட முடியும்.-/e>-p>எச். ஐ. வி நோயால் பாதிக்கப்பட்டவர் தன் உடலின் நீர்மங்களை கொடுப்பதன் மூலம் இந்நோய் பல்கிப் பெருகவும் காரணமாக இருப்பதால். எச். ஐ. வி க்கு முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எச். ஐ. வி நோயின் அறிகுறிகள் பல வருடங்களுக்கு வெளியில் தெரியாமல் பின்னர் வெளிவரும் தன்மை கொண்டது.-/e>-p>உங்களுக்கு எச். ஐ. வி தொற்று உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளவது நல்லது.-/e>-p>உலக சுகாதார தாபனம் எச். ஐ. விக்கான ஆரம்ப கால அறிகுறிகளை பட்டியல் படுத்தியுள்ளது. அவற்றுள் மிக முக்கியமாக திடீர் என உடல் எடை பாரியளவில் குறைதல், தொடர்ச்சியான இருமல், நகம் பிரிதல் மற்றும் நகத்தின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றம், களைப்பு,தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி, தொடர்ச்சியான தலைவலி, தோல் சொரசொரப்பாக மாறுதல், தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றன ஏற்பட்டால் உடனடியாக எச். ஐ. வி பரிசோதனை செய்துக் கொள்வதான் மூலம் பாதிப்புகளை இயன்றளவு குறைத்துக்கொள்ள முடியும்.-/e>-p>எச். ஐ. வி இன்று வரை மருத்துவ உலகத்துக்கு சவாலாகதான் இருக்கிறது. முறையற்ற பாலியல் உறவு கொள்வோருக்கு மட்டுமே எச். ஐ. வி தொற்று ஏற்படும் என்ற நம்பிக்கைகள் சமீப காலங்களில் தகர்ந்துவிட்டன.-/e>-p>குருதியேற்றுவதன் மூலமும் சுத்திகரிக்கப்படாத பிறர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்துவதன் மூலமும் பாதுகாப்பாற்ற சிகை அலங்காரங்கள் மூலமும் கூட எச். ஐ. வி பரவலாம். இது தவிர நோய் தொற்று உள்ள தாயின் மூலம் குழந்தைக்கு பரவலாம்.-/e>-p>எனவே எச். ஐ. வி என்றதுமே ஒரு இழிவான நோயாக பாராமல் எமது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு எச். ஐ. வி பரிசோதனை மேற்கொள்ளவது அவசியம்.-/e>-p>இது ஒரு தவறான நோய் அல்ல இது வேறு பல வழிகளில் கூட ஏற்பட்டு இருக்கலாம். எச். ஐ. வி என்றதுமே தவறான உடலுறவு கொண்டதால் தான் வருகின்றது என்ற அற்ப தனமான சிந்தனையை ஒழித்துக்கட்டினால் எச். ஐ.வி நோயால் ஏற்படும் இறப்புகளை வலுவாக குறைக்கலாம் என்பது உறுதி.-/e>-div
iSspaniSspanPn u Vaads:-thpan>iSspan37-/hpan>-/divw-/divw-dive-spanRe(.wed Topics:-thpan>-spanaidsS/a>Aids And HivS/a>Aids And Hiv Are Not The Sinp ThlngS/a>HIVS/a>HIV SymptomsS/a>Hospitals in Sri LankaS/a>Nlternal Health ServiceS/a>World Health Organizltern-/a>-/hpan>-/divw-div