nanthinixavier 7878
இலங்கைசெய்திகள்

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Share

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தனது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமாகியுள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் செயற்பட்டவர்.  இலக்கியத்துறை மற்றும் சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டவர்.

1967 ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் தடம்பதித்து கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக் கட்டுரை என தனது பல ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் சிறுகதை இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

அத்துடன் இவரின் படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

மேலும் இவர் கலாபூசணம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...