rtjy 223 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு மொட்டுவின் உறுப்பினர் போர்க்கொடி

Share

ரணிலுக்கு மொட்டுவின் உறுப்பினர் போர்க்கொடி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்படும் என்று எவரும் கூறவில்லை.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கக்கூடிய பல தகுதியான வேட்பாளர்கள் எமது கட்சியில் உள்ளனர்.

ஆகவே, ரணிலுக்கு ஆதரவளிப்போம் என்று நாம் ஒருபோதும் கூறவில்லை. பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவமே எமது நோக்கமாகும்” என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைக் களமிறக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் பொது வெளியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், மொட்டுக் கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மற்றுமொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ரஞ்சித் பண்டார மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...