tamilni 210 scaled
சினிமாபொழுதுபோக்கு

விஜய் ஆண்டனி மகள் லாரா தற்கொலை

Share

விஜய் ஆண்டனி மகள் லாரா தற்கொலை

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் லாரா (16) தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

இன்று (19.09.2023) அதிகாலை 3 மணியளவில் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா பிளஸ் 2 பயின்று வருகிறார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காலையில் லாராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்து உள்ளே சென்ற பெற்றோர் மகளை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் லாராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...

5 16
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வலம் வரும் தவெக உறுப்பினர்… பலருக்கு தெரியாத தகவல்!

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள்...

4 16
சினிமாபொழுதுபோக்கு

இசையமைப்பாளர் அனிருத் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக...