rtjy 180 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்

Share

தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த ஜனாதிபதி சட்டவிரோதமானவர்

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாகவே இருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று(18.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

”தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அது முற்றிலும் பிழையான கருத்தாகும்.

அடுத்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படாவிட்டால் ஜனாதிபதியின் அனைத்து கடமைகளும் நீக்கப்படும்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாவிட்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் அபிப்பிராயத்தை சோதிக்க வேண்டும் என முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். தெரிவித்திருந்தார். மக்களின் ​விருப்பமே அதிகாரத்தின் கேந்திர ஸ்தானமாகும்.

இவ்வாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” என பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...