eef scaled
உலகம்செய்திகள்

மம்மூட்டி குடும்பத்தில் ஒரே வருடத்தில் இரண்டாவது சோகம்!

Share

மம்மூட்டி குடும்பத்தில் ஒரே வருடத்தில் இரண்டாவது சோகம்!

நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், அவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் தற்போது எல்லா மொழிகளிலும் பாப்புலர் ஆன நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மம்மூட்டியின் அம்மா காலமானார். அவருக்கு வயது 93.

இந்நிலையில் தற்போது மம்மூட்டியின் அக்கா அமீனா காலமாகி இருக்கிறார். ஒரே வருடத்தில் மம்மூட்டி குடும்பத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டு இருப்பது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மம்மூட்டியின் அக்கா அமீனாவுக்கு 70 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...