tamilni 97 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இரகசிய தகவல்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி

Share

இலங்கையின் இரகசிய தகவல்களுடன் சுவிஸர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி

இலங்கை அரசியலிலும் உலக தரப்பிலும் தற்போது சனல் 4 ஊடகம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆவணப்பட தொகுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் பின்னணியில் இலங்கையின் பல முக்கிய அரசியல் வாதிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்படுகிறது.

குறித்த ஆவணப்படத்தில் இலங்கையின் முக்கிய புலனாய்வு அதிகாரியாக இருந்த நிசாந்த டி சில்வாவினுடைய கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏன் நீங்கள் இலங்கையில் இருக்காமல் இங்கு வந்திருக்கின்றீர்கள்?

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இராணுவ புலனாய்வு பிரிவினர், கடற்படை புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் மரண அச்சுறுத்தல் விடுத்தனர்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட விவகாரமே நான் கையாண்ட விடயங்களில் முக்கியமானது.

இந்த விசாரணைகளின் போது அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் மிகவும் மோசமான செயற்பாடுகளிற்காக பெயர் பெற்ற திரிபோலி பிளாட்டுன் குறித்து அவர் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்தின.

நான் திரிபோலி குழுவை சேர்ந்த ஐந்து நபர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டுபிடித்தேன். அந்த தொலைபேசி இலக்கங்கள் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டன.

நான் தொலைபேசி ஆவணங்கள் உட்பட பல விடயங்களை ஆராய்ந்தேன். இடங்களை கண்டுபிடிக்க முயன்றேன். அவர் கண்டுபிடித்த ஆதாரங்கள் லசந்த படுகொலை செய்யப்பட்ட அன்று காலை அவரது வீட்டிலிருந்து திரிபோலி குழுவை சேர்ந்தவர்கள் அவர் கொல்லப்படும் இடம்வரை பின்தொடர்ந்ததை உறுதி செய்தன.

பலர் கோட்டாபய ராஜபக்சவே லசந்த படுகொலையின் பின்னணியில் இருந்தார் என சந்தேகப்படுகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் குறித்த ஆவணங்களை ஆராய்ந்து அந்த சந்தேகம் சரியானது என்பதை உறுதி செய்தேன்.

ஆகவே நான் கோட்டாபய ராஜபக்சவை சிஐடிக்கு அழைத்தேன். அது ஒரு துணிச்சலான நடவடிக்கை. அதிகாரத்தில் இல்லாத போதிலும் கோட்டாபய ராஜபக்ச அச்சத்தை ஏற்படுத்தும் நபராக காணப்பட்டார்.

முக்கிய இடங்களில் செல்வாக்கு உள்ள நண்பர்கள் அவருக்கு இருந்தனர். கோட்டாபய ராஜபக்ச என்னிடம் நீங்கள் ஏன் என்னை லசந்த விக்கிரமதுங்க கொலைதொடர்பில் சந்தேகநபர் என குறிப்பிட்டுள்ளீர் என கேட்டார்.

அதற்கு நான் தேவையற்ற விடயங்களை செய்யவில்லை தேவையான விடயங்களை மாத்திரம் செய்கின்றேன் என தெரிவித்தேன். நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என தெரிவித்தேன்.

நான் உங்களை சந்தேகநபராக பெயரிட்டுள்ளேன் என தெரிவித்தேன். கோட்டபாய என்னை பற்றி அதிருப்தியடைந்தவராக காணப்பட்டார்.” என நிசாந்த தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...