rtjy 9 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

Share

யாழில் ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் சிக்கிய ஐவர்

யாழில் கெப் ரக வாகனம் மற்றும் ஒன்றரை கோடி ரூபா பணம் என்பவற்றுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரும்பிராய் பகுதியில் கடந்த 29, 30ஆம் திகதிகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

கெப் வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி பொருத்தப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனம் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேகநபர்களை கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார்சைக்கிள் மற்றும் 15 மில்லியன் (1.5 கோடி) ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Court order 1
இலங்கை

போதைப்பொருள் கடத்திய பெண் சந்தேக நபருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய...

anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...