rtjy 8 scaled
இலங்கைசெய்திகள்

கச்சதீவு மீட்பு விவகாரம் – சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு

Share

கச்சதீவு மீட்பு விவகாரம் – சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவு.

கச்சதீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிடு செய்ய முடியாது என சென்னை மேல் நீதிமன்றின் மதுரைக்கிளை அறிவித்துள்ளது.

சென்னை கடற்றொழிலாளர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், மேல் நீதிமன்ற கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சதீவு இருந்த நிலையில், 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும் தமிழக மீனவர்கள், இலங்கையில் தாக்கப்படுவதுடன் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, 1974-ம் ஆண்டில் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சதீவை மீட்க மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த மனுவூடாக சென்னை கடற்றொழிலாளர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன் கோரிக்கை விடுத்திருந்தார்.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய குழாமின் அமர்வில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், கச்சதீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

எனவே இந்த வழக்கை மேலும் முன்கொண்டு செல்ல முடியாது என அறிவித்து குறித்த மனுவை சென்னை மேல் நீதிமன்றின் மதுரை கிளை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள்ன் அத்துமீறிய மீன்பிடி நடவக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்தின் முடிவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...