rtjy 298 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரம் வழங்க ஜே.வி.பி. அடியோடு எதிர்ப்பு

Share

பொலிஸ் அதிகாரம் வழங்க ஜே.வி.பி. அடியோடு எதிர்ப்பு

இலங்கையில் பொலிஸ்துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் எமது கட்சி உடன்படாது. ஆனால், காணி அதிகாரம் பற்றி பேச்சு நடத்துவதற்கு எமது கட்சி தயாராகவே உள்ளது என்று ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது:-

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது வடக்கில் உள்ள கட்சியோ அல்லது தெற்கில் உள்ள கட்சியோ விவாதத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கதான் ஆரம்பித்துவைத்தார். வடக்கில் உள்ள வாக்குகளை இலக்கு வைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ள தந்திரோபாய அரசியல் நகர்வே இதுவாகும்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே ரணில் தீவிரமாக உள்ளார். ஏனெனில் ஏனைய உள்ளூராட்சி சபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ நடத்தப்பட்டால் அவற்றின் பெறுபேறுகள், தமக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியைப் பெற்றுக்கொடுக்காது என்பது ரணிலுக்குத் தெரியும்.

எனவே, 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய தலைவர்தான் என்ற மாயையை உருவாக்கி அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்துவதற்கான அரசியல் உபாயமாகவே 13 குறித்த விவாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, 13 தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

இரண்டாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு 13 பிளஸா அல்லது அதிகாரக் குறைப்பா என்பது பற்றிப் பேசலாம்.

பொலிஸ் அதிகாரம் வழங்கக்கூடாது. ஏனெனில் இலங்கையில் பொலிஸ் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை முதலமைச்சராகப் பிரசன்ன ரணதுங்க இருந்தால், அவர் போன்றவருக்குப் பொலிஸ் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும்? இது வடக்கில் அல்ல தெற்கில் பிரச்சினையாக அமையும். காணி அதிகாரம் பற்றி கதைக்கலாம்.

தொல்லியல் இடங்கள் மத்திய அரசின்கீழ்தான் இருக்கும். மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய காணி, ரயில்வே திணைக்களத்துக்குரிய காணி என்பன அரசின்கீழ்தான் இருக்கும்.

அதேபோல் வடக்கில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...