இலங்கையில் காதலர்களின் முதல் சந்திப்பில் விபரீதம்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் காதலர்களின் முதல் சந்திப்பில் விபரீதம்

Share

இலங்கையில் காதலர்களின் முதல் சந்திப்பில் விபரீதம்

குருநாகல், அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காதல் ஜோடி எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதுகல மலை உச்சியில் உள்ள புத்தர் சிலையை பார்வையிடுவதற்காக குறித்த காதலர்கள் இன்று காலை சென்றுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பாக இன்று இருந்தமையினால் குறித்த இளைஞனின் சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்று காணப்பட்ட நிலைலையில் இது குறித்து யுவதி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னர் யுவதி தீப்பெட்டியில் இருந்த இரண்டு குச்சிகளை கொளுத்தி, வீசியதால் தீப்பிடித்தது. இதனைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, குருநாகல் மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்.

தீயினால் அழிவடைந்த பிரதேசம் 03 ஏக்கர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயை பற்றியதனை தொடர்ந்து தப்பிய ஓடிய காதலர்கள் இருவரையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட காதலர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...