இலங்கை
வீதியில் பயணித்த காதலர்களுக்கு நேர்ந்த கதி
வீதியில் பயணித்த காதலர்களுக்கு நேர்ந்த கதி
மொரகஹஹேன நகரில் பாதசாரி கடவையில் இளம் காதலர்கள் இருவருக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் சாரதி ஐந்து நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹொரணையில் இருந்து மீப்பே பகுதிக்கு காரை செலுத்திச் சென்ற போது மொரகஹஹேன நகரின் மத்திய பகுதியில் வெள்ளைக் கோட்டில் பயணித்த இளம் ஜோடிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியதுடன் விபத்து இடம்பெற்ற சிறிது நேரத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இளம் தம்பதியினர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பன்னிபிட்டிய, தலங்கம வீதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.