இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்

Share

இலங்கை அரசாங்கத்தை எச்சரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்

நோர்வேயுடனான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றினார், அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே ஆயுதங்களை கையளித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் நாடமாளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர். மாகாணசபை வரப்பிரசாதங்களை மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் அனுபவிக்காமல் இலங்கை மக்களும் அதனை அனுபவிக்க வேண்டும். அதனாலே அதனை செயற்படுத்த முயற்சிக்கிறோம்.

அத்துடன் 13ஆம் திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுபடப்போவதில்லை. நாடு பிளவுபடாமல் இருப்பதற்காகவே ஜே.ஆர்.இந்திய இலங்கை திம்பு கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு சென்று கலந்துரையாடிய பின்னர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு வந்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.

வடக்கு – கிழக்கு பகுதிக்கு மாகாண முறையொன்றை அறிமுகப்படுத்துமாறு இந்தியாவின் திட்டத்தில் இருந்தது. ஆனால் பிளவுபடாத நாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஜே,ஆர். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறையை முழு நாட்டுக்கும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

அதேபோன்று ரணில் விக்ரமசிங்க நோர்வேயில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பிரபாகரன் ஆயுத்தை கீழே வைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அது சட்டம் அல்ல. அந்த ஒப்பந்தம் இன்று நூலகத்திலேயே இருக்கிறது.

ஒப்பந்தத்தை ஏற்றுக்காெண்டு பிரபாகரன் பலேகல பிரதேசத்துக்கு வந்து இலங்கை தொடர்பில் உரையாடல் ஒன்றை மேற்கொண்டார். அதில் இன்றைய தினம் எனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறேன். ஆனால் எனது மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு மீண்டும் எமக்கு ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்பட்டால் இரத்தக் களறி ஏற்படுத்துவேன் என தெரிவித்தே பிரபாகரன் ஆயுதங்களை கையளித்தார்.

அதன் பிரகாரமே வரதராஜபெருமாள் முதலமைச்சராக சத்திய பிரமாணம் செய்தார். அதனால் இந்த வரலாற்றை தெரிந்துகொண்டு அவதானமாக செயற்படவேண்டும்.

அதனால்தான் ரணில் விக்ரமசிங்க அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறார். இதற்கு மாற்றமான நல்ல கருத்துக்கள் இருக்குமானால் அவர்கள் அதனை முன்வைக்க வேண்டும்.

அத்துடன் சங்கரத்ன தேரர்களுக்கு 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெளிவில்லாமல் இருந்தால் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதனால் அரசாங்கம் மஹாசங்க ரத்ன தேர்ரகளுடன் விரைவாக கலந்துரையாடி அவர்களின் சந்தேகங்களை நீக்க நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...