10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்
உலகம்செய்திகள்

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்

Share

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து அசத்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் தன்னுடைய 10 மனைவிகளுடனும் கொண்டாடினார்.

இமானுவேல் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்று 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன், அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்த வீடியோவில்  மணமகன் லஸ்டின் இம்மானுவேலை 9 இளம் பெண்கள் வெள்ளை நிற திருமண உடையுடன் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர், மேலும் இன்னொரு பெண் லஸ்டின் இம்மானுவேல் மடியில் அமர்ந்துள்ளார்.

இமானுவேல் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் மற்றும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமூக ஊடகத்தில் அவர் தன்னுடைய திருமண வீடியோவை பகிர்ந்து இருந்த நிலையில், அந்த வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...