செய்திகள்
தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!
தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது!
நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதற்கமைய, 1 கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 1 கோடியே 33 லட்சத்து 71 ஆயிரத்து 290 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 70 லட்சத்து 260 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. இதேவேளை சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 11 லட்சத்து 9 ஆயிரத்து 346 பேருக்கு போடப்பட்டுள்ளது,
இதேவேளை, இதுவரை 8 லட்சத்து 91 ஆயிரத்து 734 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 15 லட்சத்து 9 ஆயிரத்து 89 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் 43 ஆயிரத்து 450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
இதுவரை 43 லட்சத்து 6 ஆயிரத்து 41 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 231 பேருக்கு ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது,
அதேபோல், 77 லட்சத்து 2 ஆயிரத்து 955 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 75 லட்சத்து 4 ஆயிரத்து 690 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2 ஆயிரத்து 865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2 ஆயிரத்து 435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது – என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login