tamilni 407 scaled
இலங்கைசெய்திகள்

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு!

Share

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு!

வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது.

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் இன்றைய தினம் இயங்கவில்லை.

பெரும்பாலான வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தமக்கு வர்த்தக நிலையங்களை மூட வர்த்தக சங்கம் உரிய முறையில் கோரிக்கை விடவில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை. அதே நேரம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...