tamilni 253 scaled
இலங்கைசெய்திகள்

யுவதியின் உயிரிழப்பால் ஆட்டங்காணும் அரசியல்

Share

யுவதியின் உயிரிழப்பால் ஆட்டங்காணும் அரசியல்

நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இழப்பீடுகளை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் தமது தனிப்பட்ட சொத்துக்களிலிருந்தே வழங்கவேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பயன்பாடுகள் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு நம்பிச் செல்ல முடியாத பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர மருந்து கொள்வனவு எனும் போர்வையில் தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்ததன் காரணமாக சுகாதாரத்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் மூலம் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு நிச்சயம் இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு மருந்து இறக்குமதிக்காக அமைச்சர் அரச அதிகாரிகள் மற்றும் அவரை சார்ந்த தரப்பினர் பெற்றுக்கொண்ட இலஞ்ச பணத்திலிருந்தும், தமது வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ள பணத்திலிருந்தும் வழங்கப்பட வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட சொத்துகளிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படவில்லை எனின் எதிர்காலத்தில் தமது உயிர், உடமைகளை இழந்து இழப்பீடு வழங்கும் நிலைமை நிச்சயம் ஏற்படும். மேலும், பொறுப்பற்றவர்கள் பொறுப்புகளில் அமர்வதற்கு நாட்டு மக்கள் எதிர்காலத்தில் அனுமதி வழங்க மாட்டார்கள் என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...