நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!
இலங்கைசெய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

Share

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஏற்படவுள்ள தாக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ள பெரும்போக பயிர்ச்செய்கை வறட்சியினால் பாதிக்கப்படும் என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இலங்கை விவசாயிகள் கடினமான ஆண்டை எதிர்கொள்வார்கள் எனவும் ஆங்கில இதழில் தெரிவிக்கப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக உலக விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், எல் நினோ விளைவு காரணமாக இலங்கையின் பெரும்போக பயிர்ச்செய்கைப் பருவம் வரட்சியின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை பலவீனமடையும் நிலை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானி பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டில் வறட்சி நிலையை ஏற்படுத்தக்கூடிய மழைப்பொழிவு குறைவதை இது குறிக்கும், அத்துடன் இது முக்கிய பெரும்போக பருவத்தில் சாகுபடிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் எல் நினோ விளைவை 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கை ஏற்கனவே அனுபவித்துள்ளது.

இந்த நிலையில் விவசாய திணைக்களமும் விவசாய அமைச்சும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை வகுத்து அடுத்த பெரும் பக்கத்தில் இந்த வறட்சி நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...