india 7888
கல்வி

இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – இந்திய தூதரகம் அறிவிப்பு

Share

இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் – இந்திய தூதரகம் அறிவிப்பு

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசால் புலமைப் பரிசில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டப் பின்படிப்பு அல்லது கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு ‘ஆயுஷ்’ புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத் தகவலை இந்திய உயர் தூதரகம் அறிவித்துள்ளது.

முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள், தங்குமிட கொடுப்பனவு மற்றும் வருடாந்த உதவித்தொகை என்பவற்றை உள்ளடக்கி இந்த புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்படுகின்றது.

இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனைக்கமைய திறமை வாய்ந்த இலங்கை மாணவர்களை தெரிவுசெய்து இந்த புலமைப் பரிசில்கள் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின்  www.mohe.gov.lk. எனும் இணையதளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 622e7d3472afc
செய்திகள்இலங்கைகல்வி

முல்லைக்கு பெருமை சேர்த்த ஊடகவியலாளர் மகள்! – புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பனிக்கன் குளம் அரசினர் தமிழ் கலைவன் பாடசாலை 2021...

Education 2
கல்விஇலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2021 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் சாதாரண  மற்றும் தரம் 5 புலமைப்பரிசில்...

6dec760d 10bca3cc 5ae34a89 education
கட்டுரைகல்வி

மாணவர் இடைவிலகலும் கல்வி நிலையும் – சி.அருள்நேசன்

கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன்...

WhatsApp Image 2021 11 23 at 6.26.11 PM
கட்டுரைகல்வி

கவனயீனங்களால் காவு கொள்ளப்படும் பிஞ்சுகள் – எப்போது முற்றுப்புளியிடப்போகிறோம்? – தேவதர்சன் சுகிந்தன்

பாடசாலை மாணவர்களை காவு வாங்கும் கவனயீனங்களுக்கு மெதுவாக மெதுவாக பழக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பத்துடன் ஓர் இறப்பாக...